சேலம் : நவ 15 – பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிரான மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கோட்டை மைதானத்தில் ஜாமியா மஸ்ஜித் டிரஸ் போர்டு முத்தவல்லி அன்வர் தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலையை கண்டித்தும் அப்பாவி பொதுமக்களை பாதுகாக்க வலியுறுத்தியும் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜாமியா மஸ்ஜித் டிரஸ் போர்டு செயலாளர் நசீர் அஹமத், மஸ்ஜிதே குபா முத்தவல்லி அப்சல் ஷெரிப்,31 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் சையத் மூஸா, விசிக மாநகர் மாவட்ட செயலாளர் காஜா மொய்தீன், நூருல் இஸ்லாம் அரபிக் கல்லூரி பேராசிரியர் முகமது அபுதாஹிர் பாகவி, மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட துணை செயலாளர் இப்ராஹிம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைச் செயலாளர் அன்சர் பாஷா உட்பட பல்வேறு கட்சிகளை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.T. லாரன்ஸ்