தமிழ் நாடு இறையியல் கல்லுரியின் மூன்றாமாண்டு மாணவர்களின் சிற்றுர் வாழ் திட்டத்தின் கீழ், சமூகப்பார்வையில் சனாதனம் என்ற கருத்தரங்கம் ,தமிழ்நாடு இறையியல் கல்லூரியின் அங்கமான கிராமிய இறையியல் நிறுவனத்தில், கல்லுரியின் முதல்வர் அருட்பணி. மார்கிரேட் கலைச்செல்வி அவர்களின் வழிகாட்டுதலின்படி, மூன்றாமாண்டு ஒருங்கிணைப்பாளர் அருட்பணி. G. ஞானபிரபு அவர்கள், மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் திருமிகு முனைவர் ஜி.பாலசுப்பிரமணியம் அவர்களை வரவேற்று, கருத்தரங்கை துவக்கி வைத்தார்.
முனைவர். பாலசுப்ரமணியம் கருத்தாக்கம் செய்தபோது, சனாதனம் என்றால் என்ன எனவும், சனாதனத்தின் தன்மைகளை எடுத்து உரைத்து, சனாதனம் என்பது நிலையானது என்றும், மாற்றத்திற்குஉரியதுஅல்ல என்றும் இது சமூகத்தோடு தொர்பு உடையது, வர்க்கத்தோடு தொடர்புடையது, கம்யூனிசத்திற்கு எதிரானது, சமூக மாற்றத்திற்கு எதிரானது என்றும் உரையாற்றினார். நல்லதொரு சிறப்பான கருத்தாக்கம் மாணக்கார்களை சிந்தனை தூண்டு வதற்கு உதவியாக இருந்தது, மற்றும் மாணவர்களை கேள்வி எழுப்ப செய்தது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு. ஆண்டனி வினோத்