திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே மீஞ்சூர் ரமணா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர், ஸ்ரீதேவி மூகாம்பிகை, ஸ்ரீ சுப்பிரமணியர் சுவாமி ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் கடந்த 13ஆம் தேதி பாலமுருகன் சிறப்பு அலங்காரத்துடன், மறுநாள் முருகன் சிவபூஜை, காட்சி 15 ஆம் தேதி முருகன் தந்தைக்கு உபதேசம், 16ந்ஆம் தேதி ராஜா அலங்காரம், 17ஆம் தேதி முருகன் தாயிடம் வேல் வாங்குதல், 18 ஆம் தேதி கந்த சஷ்டி சூரசம்ஹாரம் நடை பெற்றது. பின்னர் வரும் 19ஆம் தேதி ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத முருகனுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற உள்ளது. ஸ்ரீ கிருஷ்ண ரெட்டியார் முன்னிலையில் ரமணா நகர் வாசிகளுடன் இன்று மாலை சுவாமி வீதி உலா கோயில் வாசலில் சூரசம்ஹாரம் நடைபெற்று இரவு முருகனுக்கு மகா அபிஷேகம் அலங்காரம் தீபாராதனை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தலைவர் ஸ்ரீ கிருஷ்ண ரெட்டியார் ஸ்ரீதேவி மூகாம்பிகை ஆலய நலச்சங்கம் மற்றும் ரமணா நகர் வாசிகள் செய்து வருகின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு