திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட நந்தியம்பாக்கம் ஊராட்சியில் அடங்கிய ரயில் நிலையம் செல்லும் சாலை குண்டும், குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருந்தது.
அண்மையில் பெய்து வரும் வடகிழக்கு பருவமழையால் சாலை மேலும் மோசமடைந்து. ஆங்காங்கே குண்டும், குழியுமான இடத்தில் மழைநீர் குளம் போல தேங்கி நடந்து கூட செல்ல முடியாமல் மிகுந்த சிரமம் ஏற்பட்டது. மேலும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் என மோசமான சாலையில் ரயில் நிலையத்திற்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.
இதனையடுத்து மீஞ்சூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஜி.ரவி உத்தரவின் பேரில் 22வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் ச.கதிரவன் ஏற்பாட்டில் ரயில் நிலையம் செல்லும் சாலையை சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டுள்ளார்.
வடகிழக்கு பருவமழை காலம் என்பதால் போர்க்கால அடிப்படையில் ஜல்லி, சிமெண்ட் கலவையுடன் தற்காலிகமாக சாலையை சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உடனடியாக நடவடிக்கை மேற்கொண்ட திமுக மீஞ்சூர் ஒன்றியக்குழு தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி அவர்களுக்கும் ஒன்றிய கவுன்சிலருக்கும் பொதுமக்கள் பள்ளி மாணவ மாணவிகள் நன்றி தெரிவித்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு