திருவள்ளூர் : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின் பேரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூர் இளைஞர் அணி சார்பில் டி.வி.எஸ்.மேல்நிலைப் பள்ளி முன்பாக மாவட்ட செயலாளர் டி.ஜே. கோவிந்தராஜன் ஆலோசனைப்படி மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லோகேஷ் தலைமையில் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு.தமிழ் உதயன் முன்னிலையில் மீஞ்சூர் இளைஞரணி அமைப்பாளர் க.மில்லர் ஏற்பாட்டில் நீட் தேர்வை ஒழிப்போம் மாணவர்களை காப்போம் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மீ.வி. கோதண்டம், இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் வெள்ளிவாயல் சாவடி யுவராஜ், மாவட்ட பிரதிநிதி மணிமாறன், மீஞ்சூர் முன்னாள் பேரூர் கழக செயலாளர் நா.மோகன்ராஜ், மீஞ்சூர் பேரூர் கழகத் துணை செயலாளர் வ. மோகன், மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணை தலைவர் அலெக்சாண்டர், மாவட்டத் துணை அமைப்பாளர்கள் ஜோசப், ரஜினி, கோபால், இளங்கோவன் ,மீஞ்சூர் பேரூர் கழக அவை தலைவர் ராஜேந்திரன், தொ.மு.சா செந்தமிழ் சசி, திருப்பதி, தகவல் தொழில் நுட்ப அணி அண்ணாமலை 5-வது வார்டு செயலாளர் எழிலரசன் 13-வது வார்டு செயலாளர் சங்கர், ஜோதி ஸ்ரீதர், வசந்த், சாமுவேல், ஆந்திரா ரமேஷ், ஆண்ட்ரூஸ், திவாரி, அப்துல் சாமது, மற்றும் மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட துணை அமைப்பாளர்கள் பேரூர் கழக நிர்வாகிகள் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மகளிர் அணிகள் என பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு