சேலம் : கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாட்டங்கள் 2023 ஜீன் மாதம் முதல் 2024 ஜீன் மாதம் வரை நடைபெறுவதை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்த அரசு ஆணையிட்டுள்ளது. அதன் பேரில் சேலம் மாவட்டம், மேட்டூர் கோட்டத்திற்கு உட்பட்ட மேட்டூர், ஓமலூர் , காடையாம்பட்டி தாலுகாவில் உள்ள அனைத்து பொதுமக்களுக்கு இன்று (21/11/2023) செவ்வாய்கிழமை அன்று அரசப்பா கவுண்டர் திருமண மண்டபத்தில் மேட்டூர் கோட்டாட்சியர் தலைமையில் சிறப்பு பட்டாமுகாம் நடைபெறது.
இந்த முகாமில் ஏராளமான பொதுமக்கள் கீழ்காணும் இனங்கள் தொடர்பாக துமக்களிடமிருந்து நேரடியாக கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் பகுதி வாரியாக தீர்வு காண மனுக்கள் பெறப்பட்டது .நத்தம் புறம்போக்கு நிலங்களில் வீட்டுமனைபட்டா சிறப்பு இணைய வழிப்பட்டா (ஆதிதிராவிடர் & பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை). விளிம்பு நிலை மக்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா. நகர/நத்தம் நிலவரித்திட்டப் பட்டாக்கள். பட்டா மாறுதல் ஆணைகள் (இ-சேவை மூலம் பெறப்படும் மனுக்கள் மற்றும் சார்பதிவாளர்களிடமிருந்து பெறப்படும் இணையவழி மனுக்கள்.) வன உரிமைச் சட்டத்தின் கீழான பட்டாக்கள் வழங்கப்படும். பட்டா மாறுதல் மனுக்கள் பெறுதல். வருவாய் ஆவணங்களில் பிழைத்திருத்தம் மேற்கொள்ளுதல்.வருவாய்த்துறை தொடர்பான பிற மனுக்கள் மற்றும் இதர துறை சார்ந்த மனுக்கள் பெறபட்டது.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.T. லாரன்ஸ்