மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, கிழக்கு சட்டமன்ற தொகுதிகுட்பட்ட வளர்நகரில் ரூ.99.10 இலட்சம் மதிப்பீட்டில் சாலை அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி, மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன், மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜன் மற்றும் மண்டலத்தலைவர் அவர்கள், கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி