திருவள்ளூர் : திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மற்றும் மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் உத்தரவின் பெயரில் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தி.மு.க இளைஞரணி சார்பில் மீஞ்சூரில் அமைந்துள்ள எழில் திருமண மண்டபத்தில் ஒன்றிய நகர பேரூர் அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்களுக்கு ஆலோசனைக் கூட்டம் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜே கோவிந்தராஜன் ஆலோசனைப்படி திருவள்ளூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஊத்துக்கோட்டை K.V. லோகேஷ் தலைமையில் மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் க.சு தமிழ் உதயன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக மாநில இளைஞரணி துணை அமைப்பாளர்கள் பிரபு கஜேந்திரன், அப்துல் மாலிக், ஆகியோர் கலந்து கொண்டே தி.மு.க இளைஞரணி அமைப்பாளர்களுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
அதைத்தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் கழக இளைஞரணி செயலாளர் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும், டிசம்பர் 17ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் இருக்கும் இரண்டாவது இளைஞர் அணி மாநாட்டிற்கு திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பில் பெருந்திரளாக இளைஞர்கள் கலந்து கொள்ள வேண்டும்.நீட் தேர்வுக்கு எதிரான கையெழுத்து இயக்கம் சிறப்பாக செயல்படும் ஒன்றிய நகர பேரூர் இளைஞர் அணி அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களுக்கு கழக நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்தனர். திருவள்ளூர் மாவட்டத்திற்கு இருசக்கர வாகன பேரணிக்கு வருகை தரும் இளைஞர் அணி செயலாளரை வரவேற்கும் விதமாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட இளைஞரணி சார்பாக சிறப்பாக வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் திருவள்ளூர் இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் மோகன் பாபு, முரளிதரன், சங்கர், யுவராஜ், கதிரவன், மற்றும் மாவட்ட நிர்வாகிகள், ஒன்றிய கழக நிர்வாகிகள், நகர கழக நிர்வாகிகள், பேரூர் கழக நிர்வாகிகள், பிறர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், என பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி முடிவில் மீஞ்சூர் இளைஞர் அணி அமைப்பாளர் க.மில்லர் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு