திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அண்ணா சிலை அருகே அரசு பொது மருத்துவமனையின் சீர்கேட்டை கண்டித்து பொதுமக்களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பொன்னேரி நகர் மன்ற துணைத் தலைவர் வழக்கறிஞர் விஜயகுமார் தலைமை வகித்தார். வழக்கறிஞர் கே .தர்மராஜ் முன்னிலை வகித்தார். இதில் கண்டன உரையாற்ற பொன்னேரி வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் நெடுஞ்செழியன், புரட்சி பாரதம் கட்சியின் மாநில செயலாளர் து. பாரதிதாசன் உள்ளிட்டவர்கள்
கலந்துகொண்டு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை எனவும், செவிலியர்கள் தூய்மை பணியாளர்கள் பற்றாக்குறையினால் மருத்துவமனை சுகாதாரமின்றி செயல்படுவதாகவும், இரத்தவங்கி கட்டிடம் அமைக்கப்பட்டு இது நாள் வரையிலும் திறக்கப்படாமல் உள்ளதாகவும், விபத்தில் சிக்கி காயமடைந்தவர்களை சிறியகாயங்களாக இருந்தாலும் உடனே மேல் சிகிச்சைக்காக அவர்களை சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றதாகவும் குற்றம் சாட்டி கண்டன ஆர்ப்பாட்டத்தை கொட்டும் மழையிலும் நடத்தினர், இதில் விடுதலை சிறுத்தைகளின் கட்சி சிவராஜ், மற்றும் பொன்னேரி நகர் மன்ற உறுப்பினர்கள் செந்தில்குமார், அருணா, மணிமேகலை, கோவிந்தராஜ், சுரேஷ், சரண்யா, அபிராமி, ஆனந்தன் மீஞ்சூர் அபூபக்கர் உள்ளிட்ட திரளான பொதுமக்கள் கலந்துகொண்டனர். இறுதியில் வழக்கறிஞர் இயேசு நன்றி தெரிவித்தார்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு