திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி .3வது வார்டில் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூபாய் 2 கோடி 80 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் ஏற்பாட்டில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி பங்கேற்றார். இவருடன் ஒன்றிய செயலாளர்கள் வல்லூர் எம் எஸ் கே ரமேஷ் ராஜ், காணியம்பாக்கம் டாக்டர் ஜெகதீசன், பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், மீஞ்சூர் பேரூர் கழக செயலாளர் தமிழ் உதயன்,பள்ளி தலைமை ஆசிரியர் வேலு, திமுக நிர்வாகிகள் மீஞ்சூர் கோதண்டம் , மணிமாறன் ,மோகன், கதிரவன் ,கம்யூனிஸ்டு கதிர்வேலு,மீஞ்சூர் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் தன்ராஜ், நக்கீரன், ரஜினி, அபுபக்கர்,பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு