திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள் சிரமத்தை சந்தித்தனர். இது குறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் சேதமடைந்த சாலையை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். போர்க்கால அடிப்படையில் சேதமடைந்த சாலையை செப்பனிடுமாறு அப்போது நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சித் தலைவர் உத்தரவிட்டார். அருகில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றி அரசு மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்சாண்டர், வார்டு கவுன்சிலர்கள் சுகன்யா வெங்கடேசன், நக்கீரன், மோனிகா ராஜேஷ், மற்றும் வருவாய் ஆய்வாளர் அருணாச்சலம் கிராம நிர்வாக அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு