திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன்வாயல் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்திய முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமில் புதிதாக பதிவு செய்யும் பயனாளிகள் மற்றும் பழைய காப்பீட்டு திட்ட அட்டைகளை மாற்றி புதிய கார்டாக பதிவு செய்யும் பயனாளிகள் கலந்து கொண்டு மருத்துவ காப்பீடு செய்தனர். மேலும் மீஞ்சூர் வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் காய்ச்சல் மற்றும் மழைக்கால நோய்கள் தடுப்பு மருத்துவ முகாமும் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. இதனை பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் துவக்கி வைத்தார். மீஞ்சூர் பேரூராட்சி மன்ற தலைவர் ருக்மணி மோகன்ராஜ், துணைத்தலைவர் அலெக்சாண்டர், வார்டு கவுன்சிலர் அபூபக்கர், மீ.மு. ராமகிருஷ்ணன், ஏ.கே.சுரேஷ்,ராஜேந்திரன், சித்திக் பாஷா,அரவிந்த், அனஸ்,குரு சாலமன், அப்துல் சமத் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு