சென்னை : தமிழ்நாட்டின் தலைநகரமான பெருநகர சென்னை மாநகராட்சி அலுவலகத்தில், கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் மீட்புப் பணிகள் குறித்து மாண்புமிகு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பெருநகர மற்றும் உள்ளாட்சித் துறை அமைச்சர் கே. நேரு அவர்கள் மற்றும் அரசு தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா இ .ஆ .ப அவர்கள் மற்றும் சென்னை மாநகராட்சியின் ஆணையாளரும் கூடுதல் தலைமைச் செயலாளருமான டாக்டர். ராதாகிருஷ்ணன் இ. ஆ. ப அவர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடன் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு .க ஸ்டாலின் அவர்கள் ஆலோசனை நடத்தினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி