திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான. முத்துசாரதாவின் தலைமையில் நடைபெற்றது. இந்த மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணும்பொருட்டு, திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 15 அமர்வுகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. அந்த அமர்வுகளின் மூலம், மாவட்டம் முழுவதும் உள்ள நீதிமன்றங்களில் நிலுவையில் இருந்து வருகின்ற வழக்குகள் மற்றும் முன்வழக்குகள் என மொத்தம் 3021 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டன. இதன் மூலம் தரப்பினர்களுக்கு தீர்வு காணப்பட்ட மொத்தத் தொகை ரூ.19,20,86,874/-.நடந்த மக்கள் நீதிமன்றத்தில் வாகன விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு தீர்வு காணப்பட்டு, நிவாரணத் தொகையாக ரூ.17,50,000/-க்குரிய காசோலை வாகன விபத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு உடனடியாக முதன்மை மாவட்ட நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவருமான முத்துசாரதாவின் மூலம் வழங்கப்பட்டது.
இந்த மக்கள் நீதிமன்றத்தில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கான நீதிமன்ற கூடுதல் மாவட்ட நீதிபதி.கருணாநிதி, குடும்பநல நீதிமன்ற நீதிபதி மற்றும் தலைவர், நிரந்தர மக்கள் நீதிமன்றம் முழுக் கூடுதல் பொறுப்பாளர்கள்.விஜயகுமார் மற்றும் சரண், கூடுதல் மாவட்ட நீதிபதி, மகளிர் விரைவு நீதிமன்ற நீதிபதி ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது. இம்மக்கள் நீதிமன்றத்தில் தலைமைக் குற்றவியல் நீதித்துறை நடுவர்.மோகனா, முதன்மை சார்பு நீதிபதி.இராமச்சந்திரன், கூடுதல் சார்புநீதிமன்ற நீதிபதி மற்றும் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர். V.தீபா, மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டு தீர்ப்பாயத்தின் சிறப்பு சார்பு நீதிபதி.சாமுண்டீஸ்வரிபிரபா, கூடுதல் உரிமையியல் மாவட்ட நீதிமன்ற நீதிபதி.ரெங்கராஜ், குற்றவியல் நீதித்துறை நடுவர் எண்.1,பிரியா, கூடுதல் மகிளா நீதிமன்ற குற்றவியல் நீதித்துறை நடுவர். சௌமியா மாத்யூ ஆகிய நீதிபதிகள், மூத்த வழக்கறிஞர்கள், காப்பீட்டு நிறுவனம் மற்றும் வங்கிகளின் மேலாளர்கள், வருவாய்துறை அலுவலர்கள், வழக்காடிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.அழகுராஜா