சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அம்பேத்கரின் 67 வது நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர். பெரிய கருப்பன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் முன்னாள் அமைச்சர் தென்னவன், மாவட்ட இளைஞரணி செயலாளர் நாகனி செந்தில்குமார் , பள்ளத்தூர் ரவி, காரைக்குடி நகர செயலாளர் குணசேகரன் ,மாவட்ட மகளிர் தொண்டர் அணி அமைப்பாளர் ஹேமலதா செந்தில், மாவட்ட மாணவரணி செயலாளர் கதிர் ராஜ் குமார், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ருக்மா சரவணன், கழகத் துணைச் செயலாளர் லட்சுமி கணேஷ் மற்றும் நகர் மன்ற உறுப்பினர்கள் சோனா கண்ணன், முகமது சித்திக், நாச்சம்மை, பூமிநாதன் , ஹரிதாஸ், மைக்கேல் ராஜ் , திவ்யா சக்தி, கார்த்திகேயன், அஞ்சலிதேவி(காங்கிரஸ்) , மற்றும் தி.மு.க கழக நிர்வாகிகள் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி