திருவள்ளூர் : திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் வல்லூர், அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கும் பொதுமக்களுக்கும் தி.மு.க சார்பில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய கழகச் செயலாளர் வல்லூர் எம்.எஸ்.கே. ரமேஷ் ராஜ் ஏற்பாட்டில் நிவாரண பொருட்களை மாண்புமிகு பள்ளி கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதனை பெற்றுக் கொண்ட திருநங்கைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தங்களுக்கு இந்த நிவாரண பொருட்களை வழங்கியமைக்காக முத்தமிழறிஞர் கலைஞருக்கும், மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அவர்களுக்கும் தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக நிகழ்ச்சியுடன் கூறினர். பின்னர் வல்லூர் அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் வெள்ளத்தால் சேதம் அடைந்த பகுதிகளை பார்வையிட்டு அப்பகுதி மக்களுக்கு ஆறுதல் கூறி நிவாரண பொருட்களை வழங்கினார்.
அப்போது பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர்
மாநில கொள்கை பரப்பு துணை செயலாளர் ஆரணி அன்புவாணன் கும்மிடிப்பூண்டி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சி.எச்.சேகர் சோழவரம் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்வசேகரன் எல்லாபுரம் மூர்த்தி மீஞ்சூர் ஒன்றிய குழு பெருந்தலைவர் அத்திப்பட்டு ஜி ரவி முன்னாள் மாவட்ட பிரதிநிதி வல்லூர் தமிழரசன் அத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தி வடிவேல் அத்திப்பட்டு ஒன்றிய கவுன்சிலர் சங்கீதா அன்பழகன் மீஞ்சூர் கிழக்கு காங்கிரஸ் வட்டார தலைவர் அத்திப்பட்டு புருஷோத்தமன் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் முரளிதரன் சிறுவாக்கம் சங்கர் பழவேற்காடு கன்னிமுத்து மீஞ்சூர் ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் மீஞ்சூர் தமிழரசன் நந்தியம் ராஜா நந்தியம் ஸ்டாலின் மற்றும் தி.மு.க நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு