திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் மிக்ஜாம் புயல், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஒன்றிய குழுவின் ஏ.கே.சிவ்ஹரே, வேளாண்மை, கூட்டுறவு மற்றும் விவசாயிகள் துறை, விஜயகுமார், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை, பவ்யா பாண்டே எரிசக்தி துறை ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் ஒன்றிய குழுவிற்கு பாதிப்புகளை விளக்கி கூறினார். மீஞ்சூர் பகுதியில் பொன்னேரி – திருவொற்றியூர் சாலை சேதம் குறித்த புகைப்படங்களை பார்வையிட்டனர். தொடர்ந்து வன்னிப்பாக்கம் கிராமத்தில் கூட்டு குடிநீர் திட்ட ஆழ்துளை கிணறுகள், மின் மோட்டார்கள் பழுது குறித்து பார்வையிட்டனர். தொடர்ந்து தத்தைமஞ்சி கிராமத்தில் புயல், மழை வெள்ளத்தில் சேதமடைந்த பழங்குடியின மக்கள் குடிசைகளை பார்வையிட்டனர். தத்தைமஞ்சி கிராமத்தில் மழை வெள்ளத்தில் சேதமடைந்த நெற்பயிர்களை பார்வையிட்டனர். இந்த ஆய்வில் பொன்னேரி சார் ஆட்சியர் ஐஸ்வர்யா ராமநாதன் ,பொன்னேரி வட்டாட்சியர் மதிவாணன், கூட்டுக் குடிநீர் திட்ட அதிகாரிகள் கிராம நிர்வாக அலுவலர்கள் வன்னிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் துணைத் தலைவர் சித்ரா ரமேஷ் ஊராட்சி செயலாளர் எஸ்தர் மற்றும் அரசு துறை அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு