சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஏவி. எம் .எம் திருமண மஹாலில் வருமானவரித்துறை சார்பாக வர்த்தக சங்கத்துடன் வருமான வரி செலுத்துவது குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது. காரைக்குடி வருமானவரித் துறையின் ஐ. டி .ஓ சுப்ரமணியன் நடப்பு ஆண்டில் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் வருமான வரி செலுத்துபவர்கள் முன்கூட்டி வரி செலுத்த வேண்டும். நடப்பாண்டின் வருமானத்திற்கான வரியை இந்த ஆண்டிலேயே செலுத்த வேண்டும். ஏனெனில் இந்த ஆண்டில் அரசு மேற்கொள்ளும் நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கு பேருதவியாக இருக்கும். நடப்பு ஆண்டில் உத்தேச வருமானத்திற்கான வருமான வரியில் 75 சதவிகிதம் வரும் டிசம்பர் 15ஆம் தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும். நிதியாண்டு 22-23 காண வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இறுதி தேதி டிசம்பர் 31 எனவே அதற்குள் வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய வேண்டும். வருமான வரி துறையிலிருந்து அனுப்பப்படும் கடிதங்களுக்கு உரிய நேரத்தில் முறையான பதில் அளிக்க வேண்டும். முன்கூட்டி வரி செலுத்த தவறும் பட்சத்தில் 12 சதவிகிதம் வட்டி வசூலிக்கப்படும்.
மேலும் வருமான வரி சட்ட விதிகளின்படி நடவடிக்கைகளும் உண்டு.
எனவே டிசம்பர் 15ஆம் தேதிக்குள் 75 சதவீத வரியை செலுத்தி, நாட்டின் வளர்ச்சிக்கு உதவுவதுடன் வட்டி மற்றும் அபராதத்தை தவிர்க்கவும். என்று விளக்கம் அளித்தார். முன்னதாக வருமான வரித்துறை ஐ. டி. ஐ பத்மாவதி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியில் ஐ. டி. பி சுப்ரமணியம், ஆடிட்டர் சரவணன், தேவகோட்டை வர்த்தக சங்க தலைவர் மாஃபு பாட்ஷா, துணைத் தலைவர் செல்வம், பொருளாளர் ஜெயராமன், நகைக்கடை சங்கத் தலைவர் கோவிந்தராஜ், மற்றும் 100க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கலந்து கொண்டனர். நகைக்கடை உரிமையாளர் சோமசுந்தரம் நன்றியுரை கூறினார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி