சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், ஆட்சியர் அலுவலக வளாகப்பகுதியில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் போதை ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(14) வயது (19) வயது(30) வயது என மூன்று பிரிவுகளாக 5 கி.மீ க தூரம் மராத்தான் போட்டியில் சிறுவர்கள் , இளைஞர்கள்,முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் என ஏராளமான கலந்து கொண்டனர். இந்த போட்டியில் 600 க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். வழி நெடுகிலும் போட்டியாளர்களை பொதுமக்கள் உற்சாகப்படுத்தினர். முதல் மூன்று இடங்களைப் பிடித்த வீரர்களுக்கு ரொக்க பரிசும், பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.போட்டியில் மதுரை மை 68 வயதான கண்ணன், மற்றும் கிருபானந்தம், மற்றும் காரைக்குடி மை சேர்ந்த மாற்றுதிறனாளி குமார் , ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்றது பார்வையாளர்களுக் ஊக்கம் அளித்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மோகனசந்திரன்,
சிவகங்கை கோட்டாசியர்சுகிதா,உதவி ஆணையர் இரா.இரங்கநாதன்,கோட்ட அலுவலர்கள் பாலகிருஷ்ணன்,கந்தசாமி , சிவகங்கை வட்டாசியர் சிவக்குமார்,
மாவட்ட விளையாட்டு அலுவலர் ரமேஷ் கண்ணன் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி