திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் வன்னிப்பாக்கம் ஊராட்சிக்கு அடங்கிய மேட்டுப்பாளையம் முரிச்சம்பேடு, முரிச்சம்பேடு ஏரிக்கரை, சிறுவாக்கம் இலவம்பேடு, வன்னிப்பாக்கம், மேட்டுப்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 50 மாற்றத்திறனாளிகள் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்களுக்கு ஆரா பவுண்டேஷன் நிறுவனம் சார்பில் 3000 ரூபாய் மதிப்பிலான அரிசி போர்வை மளிகை சாமான் தார்பாய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டது. இதில் ஆரா பவுண்டேஷன் நிறுவனர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சி.மோயீசன் என்ற மோசஸ் தலைமை தாங்கி நிவாரண பொருட்களை வழங்கினார். அருகில் வன்னிப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா பஞ்சாட்சரம் சமூக பணியாளர்கள் லாரன்ஸ் ஆபிரகாம் ஜேம்ஸ் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சித்ரா ரமேஷ் ஊராட்சி செயலாளர் எஸ்தர் மற்றும் வார்டு உறுப்பினர்கள் கிராம பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு