மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், குட்லாடம்பட்டி ஊராட்சியில், மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா உத்தரவின் பேரில் மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை துணை இயக்குனர் குமரகுருபரன், கச்சைகட்டி வட்டார மருத்துவ அலுவலர் ஹரிபிரசாத் ஆலோசனையின்படி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் கேன்ட் இன் கேன்ட் இந்தியா, சகா சங்கா அட்வைசரி நிறுவனத்துடன் இணைந்து இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமிற்கு, ஊராட்சி மன்றத்தலைவர் ஜோதி மீனா தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். துணைத் தலைவர் கதிரவன், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் முத்துராஜ், சுகாதார ஆய்வாளர் ராமகிருஷ்ணன், மருத்துவமில்லா மேற்பார்வையாளர் ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பாதெரசா வரவேற்றார். இந்த முகாமில், டாக்டர் முரளி தலைமையில் மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்து ஆலோசனை இலவச மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதில், வார்டு உறுப்பினர் நல்ல தம்பி, கிராம சுகாதார செவிலியர் சத்யா, மக்களை தேடி மருத்துவம் பல்நோக்கு சுகாதார செவிலியர் நந்தினி, சுகாதார திட்ட முதன்மை மேலாளர் ஜெரோமியாஜெபஸ்டின் பலர் கலந்து கொண்டனர். முடிவில், திட்ட மேலாளர் சாலினி பாய் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி