செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்ட, நீதிமன்ற வளாகத்தில் முன்பாக செங்கல்பட்டு பார் அசோசியேஷன் தலைவர் போர்வாள் ஏ.கே.சோமசுந்தரம் அவர்களின் தலைமையில் கண்டனஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நீதிமன்றங்களில் வழக்குகளை தாக்கல் செய்கின்ற போது நேரடியாக மனு தாக்கல் செய்யாமல் இ ஃபைலிங் என்ற முறையில் இணையதள வழியாக நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்கின்ற நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த நடைமுறைக்கான கட்டமைப்புகள் நீதிமன்றங்களில் இல்லாத நிலையிலும் மற்றும் இ ஃபைலிங் நடைமுறைகளை பின்பற்றுவதற்கான உரிய அனுபவம் வாய்ந்த பயிற்சி பெற்ற நீதிமன்ற ஊழியர்கள் இல்லாத நிலையிலும் மற்றும் வழக்கறிஞர்களுக்கும் வழக்கை தாக்கல் செய்வதற்கான நடைமுறைக்கான விளக்கப் பயிற்சி எதுவும் இல்லாத நிலையிலும் மற்றும் 90% வழக்கறிஞர்கள் கிராமப்புறங்களில் இருந்து வந்து வழக்கு நடத்துகின்ற நிலையில் மேற்படி வழக்கறிஞர்களுக்கு கணினி வசதி மற்றும் இணையதளத்தில் வழக்குகளை தாக்கல் செய்வதற்கான கூடுதல் செலவினங்களுக்கான பொருளாதார சுமைகளும் உள்ளதால் வழக்கறிஞர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள்
வழக்குகளை தாக்கல் செய்வதற்கு நீதிமன்றங்களில் இ ஃபைலிங் சென்டர்கள் எதுவும் இல்லாத சூழலிலும் உரிய கட்டமைப்பு இல்லாத நிலையிலும் இ ஃபைலிங் முறையை தளர்த்த வேண்டும் என்றும் இ ஃபைலிங் முறையை நடைமுறைப்படுத்துவதற்கு கால அவகாசம் வேண்டும் என்றும் கோரி (18 .12 .2023) இன்று செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் செங்கல்பட்டு பார் அசோசியேஷன் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. மேற்படி கூட்டத்தில் பேசிய அனைத்து வழக்கறிஞர்களும் நீதிமன்ற இ ஃபைலிங் நடைமுறை சிக்கல்களை உயர்நீதிமன்றத்திற்கும் மாவட்ட நீதிமன்றத்திற்கும் தெரிவிக்கும் வகையில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக (18 .12. 2023) முதல் (20.12.2023) வரை வழக்கறிஞர்கள் நீதிமன்ற பணிகளில் இருந்து விலகி இருப்பது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இ ஃபைலிங் நடைமுறை சிக்கல்களை கலைய கோரியும் கட்டமைப்புகளை நீதிமன்றங்களில் உருவாக்க கோரியும் கட்டமைப்புகளை உருவாக்கும் வரை வழக்கறிஞர்களுக்கு உரிய பயிற்சி கொடுக்கும் வரை நீதிமன்ற ஊழியர்களுக்கு குறித்த பயிற்சி கொடுக்கும் வரை கட்டாயப்படுத்த கூடாது என்றும் தளர்வு வேண்டும் என்றும் கோரி (18. 12. 2023) இன்று பகல் சுமார் 11.30 மணி அளவில் செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் முன்பாக செங்கல்பட்டு பார் அசோசியேஷன் தலைவர் போர்வாள் ஏ. கே சோமசுந்தரம் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது மேற்படி ஆர்ப்பாட்டத்திற்கு சங்க செயலாளர் ஜி. சங்கர் துணைத்தலைவர்கள் பி மீனாட்சி , சுகந்த குமாரி, அஸ்வினி மற்றும் கூட்டமைப்பின் மண்டல செயலாளர் பழனிசாமி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். இ ஃபைலிங் நடைமுறை சிக்கல்களை கலைய கோரியும் கட்டமைப்பை உருவாக்க கோரியும் திரளான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டு கோஷமிட்டார்கள்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்