சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் முதல் ஏஜி திருச்சபையில் நேற்று நடைபெற்ற எல்லோருக்கும் கிறிஸ்மஸ் நிகழ்ச்சியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி கலந்து கொண்டு கிறிஸ்மஸ் கொண்டாடும் அனைவருக்கும் இனிய கிறிஸ்மஸ் நல்வாழ்த்துக்கள் என்று கூறியும் சிறப்புரையாற்றினார்.இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு இறையாசி பெற்றனர்.நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை முதல் ஏஜி சபையின் போதகர் மனோகரன் தனபால் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர்.இந்நிகழ்வில் கிராம நிர்வாக அலுவலர் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளரும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில செயலாளருமான இரா.அருள்ராஜ் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி