கரூர் : கரூர் மாநகராட்சிக்குட்பட்ட வாங்கபாளையத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தை இன்று தொடங்கி வைத்தோம். மக்களைத் தேடி அரசு செல்லும் ஒரு மிகச் சிறப்பான திட்டம். இல்லம் தேடி கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், கலைஞர் உரிமைத்தொகை என்று மக்களைத் தேடி செல்லும் அரசின் தொடர் முயற்சியை மனமாரப் பாராட்டுகிறேன்.
முதல் நாளே சிலரின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடிந்ததில் மகிழ்ச்சி. மாண்புமிகு தமிழக முதல்வர் அண்ணன் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு கரூர் நாடாளுமன்ற தொகுதி மக்கள் சார்பாக மனமார்ந்த நன்றிகள். உடன், கரூர் மாவட்ட ஆட்சியர் திரு.தங்கவேல் இ.ஆ.ப., கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் திருமிகு. சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் திருமிகு. கவிதா கணேசன், கரூர் மாநகராட்சி துணை மேயர் திரு. சரவணன், மாவட்ட வருவாய் அலுவலர் திரு.கண்ணன் மற்றும் அரசு அலுவலர்கள்,இந்தியா கூட்டணியின் நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி