சிவகங்கை : கடந்த வாரம் வரலாறு காணாத அளவுக்கு பெய்த மழையினால் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் பொறுத்து சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ரோட்டரி சங்கம் சார்பாக 3லட்சம் மதிப்பிலான அரிசி தானிய வகைகள் உள்ளிட்ட மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் வெள்ள நிவாரணம் பொருட்கள் லாரிகள் மூலம் அனுப்பி வைத்தனர். இந்நிகழ்வில் துணை ஆளுநர் ஆண்டனி சேவியர், சங்க தலைவர் தொழிலதிபர் கதிரேசன், செயலாளர் திருவேங்கடம் ,
பொருளாளர் ராமநாதன் மற்றும் சங்க உறுப்பினர்கள் அனைவரும் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்தனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி