விருதுநகர் : காரியாபட்டியில் நெல்லை மாவட்டத்திற்கு நிவாரண பொருட்கள். காரியாபட்டி டிச 22 விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி கல்குறிச்சி சாய்பாபா பாரா மெடிக்கல் கல்லூரி மற்றும் மனித பாதுகாப்புக் கழகம் சார்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சாய்பாபா பாராமெடிக்கல் கல்லூரி தாளாளர் ரமேஷ் முதல்வர் மகேஸ்வரி மனித பாதுகாப்பு கழக தலைவர் முனீஸ்வரன் செயலாளர் பிரின்ஸ் ஒன்றிய செயலாளர் மனோகரன் துணை தலைவர் தங்கபாண்டியன் மற்றும் ரமேஷ் கண்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி