மதுரை : மதுரை அருகே திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், பெருங்குடி ஊராட்சியில், மக்களின் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.
இதில், 600-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மனுக்களை அளித்தனர். திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம் பெருங்குடி ஊராட்சியில், மக்களின் முதல்வர் திட்டத்தின் கீழ் பொதுமக்களின் குறைதீர்ப்பு சிறப்பு முகாம் நடைபெற்றது. பெருங்குடி அமுதம் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு குறை தீர்ப்பு முகாமில், துணை ஆட்சியர்,நுகர் பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் முருகேசன், கள்ளிக்குடி வட்டாட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம், ) நீலாதேவி, திருப்பரங்குன்றம் வட்டார வளர்ச்சி அலுவலர் கீதா , பெருங்குடி ஊராட்சி மன்றத் தலைவர் பத்ம முருகேசன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் விஜயலட்சுமி ராஜேந்திரன், ஊராட்சி அலுவலர் செந்தில் வேல் முருகன் ஆகியோர் மக்களின் முதல்வர் குறை தீர்ப்பு முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி