விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி கல்குறிச்சி சாய்பாபா பாராமெடிக்கல் கல்லூரி மாணவர்கள் மற்றும் மனித பாதுகாப்பு கழகம் சார்பாக, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் சேகரிக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டது. சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்களை, மனித பாதுகாப்பு கழக மாவட்ட தலைவர் மற்றும் முனீஸ்வரன் செயலாளர் பிரின்ஸ் ஆகியோர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரில் சென்று வழங்கினார்கள்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி