மதுரை: மதுரை அருகே,சோழவந்தான் லயன் சங்கத்தின் சார்பாக பல பதக்கங்களைப் பெற்ற முள்ளிப்பள்ளம் அரசு பள்ளி சாரணர்படை ஏழை மாணவர்களுக்கு சீருடை வழங்குதல் மாற்றுத்
திறனாளிக்கு மோட்டார் பொருத்திய தையல் மிஷின் வழங்குதல் சோழவந்தானில் வள்ளலார் இயக்கத்தின் சார்பாக தினசரி அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சிக்கு அரிசி வழங்குதல் ஆகிய முப்பெரும் விழா சோழவந்தான் அரிமா சங்க கட்டிடத்தில் நடந்தது. விழாவிற்கு, லயன்ஸ் கிளப் வட்டார த்தலைவர் ஆனந்த் தலைமை தாங்கினார். சோழவந்தான் லயன்ஸ் கிளப் தலைவர் டாக்டர் மருது பாண்டியன் முன்னிலை வகித்தார். செயலாளர் மகேந்திரன் வரவேற்றார். அரிமா கவர்னர் இன்ஜினியர் செல்லபாண்டி மண்டலத்தலைவர் ஜெயச்சந்திரன், மதுரை விவேகம் அறம் பெஸ்ட் ஆகிய லைன்ஸ் கிளப்புகளின் நிர்வாகிகள் நகர லயன்ஸ் கிளப் மூத்த நிர்வாகிகள் பரிசுத்த ராஜன் காந்தன் சரவணன் கண்ணன் ஆகியோர் சேவை திட்டங்கள் பற்றி பேசினார்கள். சோழவந்தான் வள்ளலார் சங்கத்தின் தலைவர் கருப்புசாமி, ஜெனகை மாரியம்மன் கோவில் அருகில் தினசரி ஏழை மக்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கும் திட்டத்திற்கு லயன்ஸ் கிளப் சார்பாக இரண்டுமூடை அரிசி வழங்கப்பட்டது.
பல பதக்கங்களை பெற்று அடுத்த கட்டத்திற்கு செல்லக்கூடிய முள்ளிப் பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளி சாரணர் படை மாணவர்களுக்கு சாரணர் படை சீருடை மற்றும் பேப்பர் பேனா வழங்கப்பட்டது. மாற்றுத்திறனாளி சரவணனுக்கு, மோட்டார் பொருத்திய தையல் மிஷின் இலவசமாக வழங்கப்பட்டது. கூட்டத்தில், சோழவந்தான் நகரில் பஸ் நிறுத்தங்களில் பயணிகளுக்கு நிழல் குடை இல்லாத நிலையை போக்குவதற்கு டாக்டர் மருது பாண்டியன் சொந்த செலவில் பயணிகள் நிழற்குடை வைப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது. சில பள்ளிகளுக்கு கழிப்பறை வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்ககூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அரிமா மகளிர் தலைவி பிரேமா செல்லப்பாண்டி விழாவினை தொகுத்து வழங்கினார். பொருளாளர் ஜெய்கணேஷ் நடந்து முடிந்த சேவை திட்டம் மற்றும் நடக்கிற சேவை திட்டம் குறித்து தொகுத்து வழங்கினார். செல்வராஜ் நன்றி கூறினார். இக்கூட்டத்தில், மதுரை விவேகம் லைன்ஸ் கிளப் மதுரை ஆர் .எம் லயன்ஸ் கிளப் மதுரை பெஸ்ட் லயன்ஸ் கிளப் மற்றும் சோழவந்தான் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி