விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், நடைபெற்று வரும் வளர்ச்சிப் பணிகள் குறித்து ,மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். நரிக்குடி ஊராட்சி ஒன்றியம், கண்டு கொண்டான் மாணிக்கம் கிராமத்தில், முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.17.40 இலட்சம் மதிப்பில் முடிவுற்ற சாலை பணிகளை நேரில் சென்று பார்வையிட்டு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார். பின்னர், நரிக்குடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.57.80 இலட்சம் மதிப்பில் புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்டு ஆய்வு செய்து, அனைத்து விதமான நோய்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை மற்றும் நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்துகள் குறித்தும், அங்கு வரும் புற நோயாளிகளிடம் சுகாதார நிலைய சேவையின் தரம் மற்றும் குறைகளை குறித்தும் கேட்டறிந்தார். மேலும், நரிக்குடியில் பிரதம மந்திரி ஆவாஷ் யோஜனா திட்டத்தின் கீழ் அரசு மானியத்தில் வீடு கட்டப்பட்டு வருவதையும், ஆதித்தனேந்தல் சமத்துவபுரத்தில் ரூ.13.10 இலட்சம் மதிப்பில் முடிவுற்ற சாலை பராமரிப்பு பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உதவி பொறியாளர்கள், வட்டாட்சியர் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி