சிவகங்கை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் திருப்பத்தூர் பேரூராட்சி மற்றும் காரைக்குடி நகராடச்சிக்குட்பட்ட பகுதியில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினை காணொலிக் காட்சி (offline) வாயிலாக, திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் அப்புதிய கட்டிடத்தில் குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்பித்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் இன்று (05.01.2024) நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் கட்டப்பட்டுள்ள அறிவுசார் மையத்தினை காணொலிக் காட்சி (offline) வாயிலாக, திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து, மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள் திருப்பத்தூர் பேரூராட்சி மற்றும் காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கட்டப்பட்ட அறிவுசார் மைய கட்டிடத்தில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித், இ.ஆ.ப., அவர்கள் மற்றும் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் திரு.எஸ்.மாங்குடி, உள்ளாட்சி அமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர்களுடன் குத்துவிளக்கேற்றி வைத்து சிறப்பித்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றைய தினம் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள மொத்தம் 71 அறிவுசார் மையங்களில் 33 அறிவுசார் மையங்களை காணொலிக் காட்சி வாயிலாக, திறந்து வைத்துள்ளார்கள். அதில், நமது சிவகங்கை மாவட்டத்தில் திருப்பத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ரூ. 1.95 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவுசார் மையமும், காரைக்குடி நகராட்சிக்குட்பட்ட கண்ணதாசன் மணிமண்டப வளாகத்தில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவுசார் மையங்களும் ஒன்றாகும். மாணவர்கள்களின் எதிர்கால் நலனை கருத்தில் கொண்டு தொலைநோக்கு பார்வையுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அறிவு போட்டிகள் நிறைந்த இந்நவீன காலத்தில் மாணவர்கள் சிறந்த முறையில் பயின்று தங்களுக்கான துறையை தேர்ந்தெடுத்து அதில் வெற்றி காண வேண்டும். அதற்கு அடிப்படையாகவும் தமிழக அரசின் சார்பில் நான் முதல்வன் என்ற திட்டமும் அறிவிக்கப்பட்டு, மாணாக்கர்களின் எதிர்காலத்தை நிர்ணயிப்பதற்கு அத்திட்டம் ஊன்றுகோளாக அமைகிறது.
குறிப்பாக, போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில், நூலகங்கள் என்பதையும் தாண்டி பல்வேறு சிறப்பு அம்சங்களுடன், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அறிவுசார் மையங்களை அமைத்திட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் உத்தரவிடப்பட்டு, நவீன வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டு, இன்றைய தினம் அம்மையங்கள் திறப்பு விழா காணப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு போட்டி தேர்வில் கலந்து கொள்வதற்கான ஆர்வத்தை தூண்டுகின்ற வகையில் இம்மையங்கள் சிறப்பாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒரு மாநிலத்தின் வளர்ச்சி என்பது கல்வி அறிவினை பொறுத்தே அமைகிறது. எனவே, எதிர்கால தூண்களாகிய மாணவர்கள் தங்களது கல்வித்திறனை மேம்படுத்திக்கொள்வதற்கும், தங்களுக்கான வாசிப்பு திறன்களை மேம்படுத்திக் கொள்வதற்கும், தங்களுக்கான இலக்கினை எழுதுவதற்கும் இம்மையங்களை சிறப்பான முறையில் பயன்படுத்திக் கொண்டு, நல்ல முறையில் பேணிக்காத்திட வேண்டும். இம்மையங்களில் தற்போதுள்ள வசதிகளை விட இன்னும் கூடுதல் வசதிகளை மேம்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
இன்றைய தினம் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ள இந்த அறிவுசார் மையத்தினை சுற்று வட்டார பகுதியிலுள்ள அனைத்து மாணவர்களும், இளைஞர்களும், மூத்தோர்களும் சிறந்த முறையில் பயன்படுத்திக் கொண்டு , பயன்பெற வேண்டும் என மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், திருப்பத்தூர் பேரூராட்சித்தலைவர் திருமதி கோகிலாராணி, காரைக்குடி நகர் மன்றத்தலைவர் திரு. முத்துதுரை, உதவி இயக்குநர் (பொ) பேரூராட்சிகள் திரு.எம்.ஜெயகிருஷ்ணன், காரைக்குடி நகராட்சி ஆணையாளர் திரு.வீரமுத்துக்குமார், நகர்மன்ற துணைத்தலைவர் திரு.குணசேகரன், முன்னாள் அமைச்சர் திரு.தென்னவன், மாவட்ட வர்த்தக அணி தலைவர் ருக்மா சரவணன் அவர்கள் காரைக்குடி நகராட்சி பொறியாளர் திரு.இசக்கி, திருப்பத்தூர் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் திரு.மணிகண்டன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் திரு.செந்தில்குமார் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள், மாணவ மாணவிகள், ஒப்பந்ததாரர்கள் திரு.இளங்கோவன் எம்.ஆர்.சி மற்றும் திரு.செந்தில்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி