திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் மறைந்த தே.மு.தி.க தலைவர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் திருவுருவப்படத்திற்கு அனைத்து கட்சி சார்பில் மாலை அணிவித்து மலர் தூவி இன்று அஞ்சலி செலுத்தினர். இதில் தே.மு.தி..க மாவட்ட கழக செயலாளர் டில்லி பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் ஆகியோர் பங்கேற்றனர் தே.மு.தி.க தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர் கணேஷ் குமார் தலைமையில் கிழக்கு மாவட்ட தே.மு.தி.க சார்பில் 1000பேருக்கு. அன்னதானம் வழங்கினர். இதில் தே.மு.தி.க நிர்வாகிகள் பாபுராவ் பாபு முருகன் ரமேஷ் ஒன்றிய கழகச் செயலாளர்கள் அங்கமுத்து தனஞ்செயன் ஜெகதீசன்வாசகர் ராமதாஸ் பிரகாஷ் கானிமுத்து மற்றும் மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ், பேரூர் கழக தி.மு.க செயலாளர் க.சு. தமிழ்உதயன், திருவெள்ளைவாயல் சோமுராஜசேகர்,மீஞ்சூர் சிவராஜ், அரியன்வாயல் அபுபக்கர், பூண்டி ஜெயவேல், அத்திப்பட்டு புருஷோத்தமன், உள்ளிட்ட திரளான முக்கிய பொறுப்பாளர்கள் மற்றும் கட்சித் தொண்டர்கள் பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர். இதே போன்று கவுண்டர் பாளையத்தில் தே.மு.தி.க அவைத்தலைவர் மாரிமுத்து தலைமையில் மறைந்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டு மலர் தூவி அவருக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் அ.தி.மு.க நிர்வாகி அமிர்தலிங்கம் உள்ளிட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு