மதுரை : மதுரை மாவட்டம் . வாடிப்பட்டி தாலுகா(கருப்பட்டி ஊராட்சி) கருப்பட்டி என்ற பெயரில் அரசு உயர்நிலைப் பள்ளியும் இந்த பள்ளிக்கு சமையல் கூடம் இரும்பாடி ஊராட்சி என்ற பெயரிலும் சமையல் கூடம் 2021 2022 அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் மக்களின் வரிப்பணமான 6.9 லட்சம் செலவில் கடந்த ஒரு ஆண்டுகளாக கட்டப்பட்டு வந்தது இந்த கட்டிடம் கட்டுவதற்கு கருப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் கட்டிடத்தை கட்டி வரும் ஒப்பந்ததாரரால் இடிக்கப்பட்டது. கட்டிடம் கட்டி முடித்த பின்பும் வெளியில் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சத்துணவு ஊழியர்கள் சமையல் செய்து வருகிறார்கள் .சுற்றுச்சூழல் இல்லாததால் வெட்ட வெளியில் சமையல் செய்வதால் வாகன போக்குவரத்தால் சமையல் செய்யும் இடத்திற்கு சுகாதார கேடு ஏற்படுவதாக கருப்பட்டி கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். சுற்றுச் சுவரை இடித்த ஒப்பந்ததாரர் விரைவில் சுற்றுச்சுவரை கட்டித் தர வேண்டும் என்று கருப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்.
திரு.லெட்சர்கான் சாகுல் ஹமீது