மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி. மூர்த்தி, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நடைபெறுவதை முன்னிட்டு, முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் ஆகியோர் உடன் உள்ளனர். மதுரை அலங்காநல்லூர், பாலமேடு, ஜல்லிக்கட்டு நடைபெறும் இடங்களில், தென்மண்டல ஐஜி நரேந்திரன் நாயர் ஆய்வு. மதுரை மாவட்டத்தில்
பொங்கல் திருநாளையொட்டி, பாலமேட்டில் 16ம் தேதியும் அலங்காநல்லூரில் 17 ம் தேதியும் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்னேற்பாடுகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை , தென்மண்டல ஐஜி நரேந்திர நாயர், டி. ஐ.ஜி ரம்யா பாரதி, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். இதில், வாடிவாசல், ஆடுகளம், பார்வையாளர் மாடம், காளைகள் சேகரிக்கும் இடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதில், பாலமேடு , அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு கமிட்டியினர் பேரூராட்சி செயல் அலுவலர்கள், பணியாளர்கள் உடன் இருந்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி