திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி 18 வார்டுக்கான மக்களுடன் முதல்வர் திட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் மீஞ்சூர் பேரூராட்சி செயல் அலுவலர் வெற்றியரசு வரவேற்பு அளித்தார். மீஞ்சூர் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமை தாங்கினார். மீஞ்சூர் பேரூராட்சி துணை தலைவர் அலெக்சாண்டர் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் துரை சந்திரசேகர் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி மக்களுடன் முதல்வர் திட்டத்தை துவக்கி வைத்தார். பின்பு 13 துறைகளைச் சார்ந்த அரசு அதிகாரியிடம் இது சம்பந்தமாக கேட்டு அறிந்தார். மீஞ்சூர் பேரூர் தி.மு.க கழகச் செயலாளர் க.சு. தமிழ் உதயன் மற்றும் பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ரஜினி, குமாரி புகழேந்தி, நக்கீரன், சங்கீதா சேகர், கவிதா சங்கர் ,பரிமளா அருண்குமார், ஜெயலட்சுமி ஜெய்சங்கர், ஜெயலட்சுமி தன்ராஜ், சுகன்யா வெங்கடேசன், அபூபக்கர், மோனிகா ராஜேஷ், மற்றும் தி.மு.க நிர்வாகிகள் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் அரசு துறை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு