மதுரை: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளி நாடுகளிலும், இந்தியாவின் மற்ற மாநிலங்களிலும் வாழும் தமிழர்களின் நலன் காக்க “பல்வேறு நாடுகளில் உள்ள தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாகவும், அவர்களின் பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாகவும், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஒவ்வொரு ஆண்டும் ஜன.12-ம் நாள் அயலகத் தமிழர் தினமாக கொண்டாடப்படும்” என அறிவித்தார். அதன்படி, 2024 ஆம் ஆண்டு அயலகத் தமிழர் தினம் 2024 “தமிழ் வெல்லும்” என்ற கருப்பொருளுடன் நடத்த திட்டமிடப்பட்டு, ஜன.12 ஆம் தேதி கொண்டாடப்பட்டது.சென்னை வர்த்தக மையத்தில் இந்த ஆண்டிற்கான அயலகத் தமிழர் மாநாடு ஜன.11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. மூன்றாவது ஆண்டாக நடைபெறும் அயலகத் தமிழர் மாநாட்டில், இரண்டாம் நாளாகிய ஜன.12 ம் தேதியன்று, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வருகை புரிந்து சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் அறிவியல், தொழில், சமூக சேவை, விளையாட்டு என கிட்டதிட்ட 8 பிரிவுகளின் கீழ் பல்வேறு துறைகளில் சிறப்பாக பங்காற்றிய அயலகத் தமிழர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இந்த ஆண்டு “தமிழ் வெல்லும்” என்ற கருப்பொருளில் அயலகத் தமிழர்கள் தினம் கொண்டாடப்பட்டது. இதில் 58 நாடுகளிலிருந்து தமிழ் வம்சாவளியினர், அமைச்சர்கள், கல்வியாளர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 218 சர்வதேச தமிழ் சங்கங்களை சேர்ந்த அயலகத் தமிழர்கள் பங்கேற்றனர்.மதுரை வலையங்குளம் பகுதியில் உள்ள குதிரை குத்தி கிராமத்தைச் சேர்ந்தவர். கொரிய தமிழச் சங்கத்தின் மேனாள் செயலாளர் முனைவர். ராமன் குருசாமி ஆவார். விளையாட்டுப் பிரிவில் தென் கொரியா நாட்டில் வசிக்கும் ராமன் குருசாமிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் விளையாட்டு துறையில் தமிழக அரசின் கணியன் பூங்குன்றனார் விருது, தங்கப் பதக்கம் மற்றும் பாராட்டு பட்டயம் வழங்கி கௌரவித்தார்.முனைவர் ராமன் குருசாமி, சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் முடித்த முதல் இந்தியர் என்ற பெருமைக்குரியவர் ஆவார். இவர், 2020 ஆம் ஆண்டு கொரிய தமிழ்ச் சங்க விருது வழங்கும் நிகழ்வில், விளையாட்டுப் பிரிவில் விருது வென்றது குறிப்பிடத்தக்கது. இவர் கொரிய சைக்ளிங் கிராண்ட் ஸ்லாம் (1857 கிலோமீட்டர்) பெற்ற முதல் இந்தியர் ஆவார். இவர், 2020 ஆம் ஆண்டு கொரிய தமிழ்ச் சங்கம் விருது வழங்கும் நிகழ்வில், விளையாட்டுப் பிரிவில் விருது பெற்றவர்.
இதனைத் தொடர்ந்து மாநாட்டின் தேர்வுக்குழு உறுப்பினர்களால் முன்னரே தேர்ந்தெடுக்கப்பட்ட அயலகத் தமிழ்ச் சங்க உறுப்பினர்களுக்கு, தமிழக முதல்வர் விருது வழங்கி சிறப்பித்தார். கொரிய தமிழ்ச் சங்கத்தின் மேனாள் செயலாளர் முனைவர். ராமன் குருசாமி விளையாட்டுப் பிரிவில் விருது பெற்று கொரிய தமிழ்ச்சங்கத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கணியன் பூங்குன்றனார் விருதை ராமன் குருசாமிக்கு வழங்கி சிறப்பித்தார். “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்னும் உலகப் புகழ் பெற்ற தமிழ் இலக்கியக் கவிதை வரிகளைக் கொண்ட பாடலை இயற்றியவர் சங்க காலக் கவிஞரான கணியன் பூங்குன்றனார் ஆவார்.உலகத் தமிழர்களின் சமூக மேம்பாட்டிற்காக சிறந்த பங்களிப்பை வழங்கி வரும் விளையாட்டு துறையில் சேவைகளை கௌரவிக்கும் விதத்தில் இந்த விருது வழங்கப்பட்டது. விருதைப் பெற்றுக் கொண்ட ராமன் குருசாமி, விருதைத் தனக்கு வழங்கி கௌரவித்த தமிழ் நாடு அரசாங்கத்திற்கும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி