செங்கல்பட்டு : தமிழ்நாடு அனைத்து அரசு அலுவலர்கள் ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி பணியாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகவளாகத்தில் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்ய கோருதல் உள்ளிட்ட பத்து அம்ச வாழ்வாதாரக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி கவன ஈர்ப்பு கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வெங்கடேசன். சுப்பிரமணி மாவட்ட அமைப்பாளர் அவர்கள் தலைமையிலும் ஜெயந்தி . முருகன் மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் தில்லை கோவிந்தன் மாவட்ட நிதி காப்பாளர் அவர்கள் வரவேற்புரை ஆற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இதில் கவிதா மாவட்ட செயலாளர் டி .என். ஜி ஓ யூ .செல்லதாய் மாநில மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு ஆசிரியர் சங்கம். மற்றும் குபேந்திரன் தமிழ்நாடு அரசுத்துறை ஊர்தி ஓட்டுநர்கள் தலைமை சங்கம் சிறப்புரையாற்றினர்.
இதில் ஹரிகுமார் மாவட்ட தலைவர் தமிழ்நாடு மருத்துவ துறை அமைச்சுப் பணியாளர்கள் சங்கம் .டோமினிக் மாவட்ட தலைவர் டி. என் ஹெச் எஸ் .பி. ஜி. டி. ஏ வாழ்த்துறையும் ஜோசப் மாவட்ட நிதி காப்பாளர் மற்றும் கிராம உதவியாளர்கள் காளி கஜேந்திரன் வேலு இவர்கள் நன்றியுரை ஆற்றி இப்போராட்டத்தை முடித்தனர். இப்போராட்டத்தில் ஆர்ப்பாட்டக் கோஷங்களாக வாழ்க வாழ்க வாழ்க வாழ்கவே அரசு அலுவலர் ஆசிரியர் உள்ளாட்சி பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வாழ்கவே தமிழக அரசே தமிழக அரசே நிறைவேற்று நிறைவேற்று தேர்தல் கால வாக்குறுதிகளை நிறைவேற்றிடு ஏமாளிகள் இல்லை ஏமாளிகள் இல்லை அரசு அலுவலர்கள் ஏமாளிகள் இல்லை போன்ற கோஷங்களை எழுப்பினர் இதில் 500க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்
அன்பழகன்