ஈரோடு : ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பெடரல் வங்கி அம்மாபேட்டை படவல் கால்வாய் கிளை திறப்பு விழா (2-2 – 2024) அன்று காலை 10 மணிக்கு நடைபெற்றது. இந்த திறப்பு விழாவிற்க்கு பெடரல் வங்கி ஈரோடு மண்டல துணை பொது மேலாளர் திரு. அபிபால் தலைமை தாங்கினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக உச்சநீதிமன்ற முன்னால் தலைமை நீதியரசரும் கேரளா மாநிலத்தின் முன்னால் கவர்னருமான உயர்திரு .சதாசிவம் அவர்கள் கலந்து கொண்டு வங்கி கிளையை திறந்துவைத்து உரையாற்றினார். இந்த விழாவில் பெடரல் வங்கியின் முன்னால் சென்னை மண்டல பொது மேலாளர் உயர்திரு. பழனியப்பன் மற்றும் பொது மக்கள் மற்றும் வங்கியின் வாடிக்கையாளர்கள் மற்றும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெடரல் வங்கி கிளை மேலாளார்கள் திரளாக கலந்து கொண்டனர். மேலும் முன்னால் உச்சநீதிமன்ற தலைமை நீதியரசர் வருகையை ஒட்டி அம்மாபேட்டை போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பெடரல் வங்கி படவல் கால்வாய் கிளை மேலாளர் ராம்னிவாஸ் நன்றி கூறினார். நாட்டுப்பன் உடன் விழா இனிதே நிறைவுபெற்றது.
ஈரோட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்கள் :
R.கிருஷ்ணமூர்த்தி
N.செந்தில்குமார்