திருவள்ளூர்: கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் சிறப்பு முகாம்கள் நடத்தி தகுதி வாய்ந்த பயனாளிகளுக்கு பட்டாக்களை வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டத்தில் சிறப்பு முகாம்களின் பொதுமக்களிடம் மனுக்கள் பெறப்பட்டு பயனாளிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதனையடுத்து திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை வட்டங்களை சேர்ந்த 2973 பயனாளிகளுக்கு வீட்டுமனைப் பட்டாவினை கைத்தறித்துறை அமைச்சர் காந்தி வழங்கினார். இந்நிகழ்வில் எம்.எல்.ஏக்கள் துரை.சந்திரசேகர், டி.ஜெ.கோவிந்தராசன், ஆட்சியர் பிரபுசங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு