கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி முதல் சாம்பல் புதன்முதல் தவக்காலத்தை கடைப்பிடித்து வந்தனர். தற்போது கிறிஸ்து உயிர்ப்பு பெருவிழா என்னும் ஈஸ்டர் தின விழா கொண்டாட்டங்களோடு தவக்காலத்தை நிறைவு செய்கின்றனர். ஈஸ்டர் தின கொண்டாட்டங்களை முன்னிட்டு அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் நள்ளிரவு சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. இரவு 11:15 மணிக்கு துவங்கிய திருப்பலிகள் அதிகாலை 2 மணி வரை நடைபெற்றன.மதுரையில் கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் கத்தோலிக்க திருச்சபை மதுரை உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி பாப்பு சாமி ஈஸ்டர் சிறப்பு.திருப்பலி நிறைவேற்றினார்.
தொடர்ந்து ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜோசப் உதவி பங்கு தந்தை சின்னதுரை, அஞ்சல் நகர் இடைவிடா சகாய அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அருள்சேகர், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜெயராஜ் மற்றும் புதூர் லூர்தன்னை ஆலயம், அண்ணா நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயம், டவுன்ஹால் ரோடு ஜெபமாலை அன்னை ஆலயம், ரயில்வே காலனி திருஇருதய ஆண்டவர் ஆலயம், சமயநல்லூர் புனித வளனார் ஆலயம் ஆகிய அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் நள்ளிரவு ஈஸ்டர் சிறப்பு திருப்பலிகள் நடைபெற்றன. திருப்பலி முடிந்ததும் பெரியவர்களிடம் ஆசி பெறுதல் மற்றும் ஒருவருக்கொருவர் ஈஸ்டர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர். சி எஸ் ஐ திருச்சபையில் நரிமேடு கதி ட்ரல் ஆலயத்தில் பேராயர் ஜெயசிங் பிரபாகரன் ஈஸ்டர் ஆராதனை நிறைவேற்றினார், தொடர்ந்து அனைத்து சி எஸ் ஐ த தேவாலயங்கள் மற்றும் பெந்தேகோஸ்தே சபைகள். புதிய ஜீவிய சபை போன்ற அனைத்து சபைகளிலும் அதிகாலை 4:30 மணிக்கு ஈஸ்டர் ஆராதனை நடைபெற்றது.
அனைத்து நிகழ்வுகளிலும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் குடும்பங்களோடு வந்து கலந்து கொண்டு இறையாசீர் பெற்றனர். ஒருவருக்கொருவர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு இல்லங்களுக்கு சென்றனர் பிப்ரவரி 14-ஆம் தேதி சாம்பல் புதனோடு தொடங்கிய தவக்காலத்தை இன்று ஈஸ்டர் என்னும் உயிர்ப்பு பெருவிழாவோடு நிறைவு செய்கின்றனர்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்