விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில், 36,வது கொரோனா தொற்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது. மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள், அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள், அரசுப்பள்ளிகள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் என மொத்தம் 2 ஆயிரத்து, 143 சிறப்பு தடுப்பூசி மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இந்த சிறப்பு தடுப்பூசி மையங்கள் மூலம் 39 ஆயிரத்து, 873 பேருக்கு கொரோனா தொற்று தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மாவட்ட சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி