சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் போஸ்ட் ஆபீஸ் வீதியில் உள்ள தனியார் வங்கியில் பாம்பு ஒன்று புகுந்தது கண்டு வங்கி ஊழியர் உடனடியாக வங்கியின் மேலாளரிடம் தகவல் தெரிவித்து விரைந்து திருப்புத்தூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் பேரில் நிலைய அலுவலர் பொறுப்பு ஆனந்த சுப்பிரமணியன் தலைமையிலான பேரிடர் மீட்பு குழுவினர் வங்கிக்கு உடனடியாக விரைந்து வந்து வங்கியின் முன்புற வாசல் பகுதியில் ஏடிஎம் பகுதியில் வெளிப்புறத்தில் ஒரு மூலையில் இருந்த ஐந்து அடி நீளம் கொண்ட சாரை பாம்பை பாம்பு பிடிக்கும் உபகரண கருவிகள் கொண்டு பத்திரமாக உயிருடன் மீட்டனர் பின்னர் திருப்புத்தூர் வனத்துறை அலுவலகத்தில் பாம்பினை ஒப்படைத்தனர்
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்
திரு.அப்பாஸ் அலி