மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் தெப்பக்குளம் பகுதியில் தேனி
நாடளுமன்ற உறுப்பினர் ரவீந்திரநாத், நிதியிலிருந்து ரூ. 8 லட்சம் மதிப்பிலான உயர் மின் உயர்மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டன. இதை, தேனி ரவிந்திநாத். எம்.பி. திறந்துவைத்தார். முன்னதாக, அலங்கா நல்லூர் பேரூராட்சி சேர்மன் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ் ரவீந்திரன், எம்.பி.யை வரவேற்று, சால்வே அணிவித்தார் . இந்த விழாவில் மாவட்ட செயலாளர் முருகேசன், ஒன்றிய செயலாளர் கல்லணை சேது சீனிவாசன், முடுவார் பட்டி முத்துகிருஷ்ணன், பேரூர் செயலாளர் வெள்ளைகங்கை, பாலமேடு நகர செயலாளர் சேகர், தொகுதிச் செயலாளர் எரம்பட்டி முருகன், மாவட்ட மகளிர் அணி பிரதிநிதி தமிழரசி, முனியசாமி, டைல்ஸ் ரவி, மாவட்ட ஒன்றிய கிளைக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி