சென்னை: அரிமா சங்கம் காந்தி நிழற்சாலை புரசை அரிமா சங்கம் சார்பில் வளசரவாக்கத்தில் அமைந்துள்ள அக்சயா டிரஸ்ட் முதியோர் இல்லத்திற்கு ஒரு மாதத்திற்கு உணவு சமைக்க உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. மேலும் 19.02.2020 அன்று நாள் முழுவதும் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் உறுப்பினரும், வளசரவாக்கம் அரிமா சங்க தலைவருமான திரு.பழனி அவர்கள் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. திரு.பழனி அவர்கள் பல்வேறு நலதிட்ட உதவிகள் செய்து வரும் சிறந்த சமூக சேவகர் ஆவார். இவர் கடந்த பொங்கல் பண்டிகைக்கு நியூஸ் மீடியா அசோசியேஷன் ஆப் இந்தியா சங்கத்தின் சார்பாக ஏழை விவசாயிகளுக்கு புத்தாடை வழங்க நன்கொடை வழங்கினார். பேசுவதற்கும் பழகுவதற்கும் மிகவும் இனிமையானவர்.