மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்படுவதாக பிரதமர் மோடி நேற்று அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் ஏப்ரல் 20-க்கு பிறகு சில நிபந்தனைகளுடன் தளர்வுகள் இருக்கும் எனவும் அதுகுறித்து வழிகாட்டு நெறிமுறைகளை மத்திய அரசு இன்று வெளியிடும் எனவும் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகு என்னென்ன தளர்வுகள்… அதன் வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது,
-
ஏப்ரல் 20 முதல் விவசாயம், தோட்டக்கலை, பண்ணைத்தொழில், விளைபொருள் கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-
மாநிலங்கள் மாவட்டங்களுக்கு இடையேயான மக்கள் போக்குவரத்துக்கு தடை தொடரும்.
-
எலெக்ட்ரீசியன், பிளம்பர், தச்சர், மோட்டார் மெக்கானிக் ஆகியோர் வேலை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு பிறகு சிறு குறு தொழில் செய்வோர் பணிகளை தொடரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
100 நாள் வேலை திட்டத்தில் பணிகளை தொடரலாம்
-
விவசாயம் சார்ந்த இயந்திர நிறுவனங்கள், பழுது நீக்கும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
-
நிறுவனங்களில் வேலை செய்யும் ஊழியர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்துகொண்டு பணியை தொடர வேண்டும்.
-
அனுமதிக்கப்பட்ட நிறுவனங்களில் உடல் வெப்பநிலை பார்க்கும் கருவி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.
-
வேலைக்கு செல்வோர் பொதுஇடங்களில் எச்சில் துப்புதல் கூடாது.
-
அனைத்து கல்வி, பயிற்சி நிறுவனங்கள் இயங்காது.
-
சினிமா அரங்குகள், மால்கள், ஷாப்பிங், விளையாட்டு வளாகங்கள், ஜிம்கள், நீச்சல் குளங்கள், தியேட்டர்கள், பார்கள் போன்றவை மே 3 வரை மூடப்பட வேண்டும்.
-
மளிகைக் கடைகள், காய்கறிக் கடைகள், பழக்கடைகள், பால் நிலையங்கள், இறைச்சிக்கடைகள், திறந்திருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்கள், பாதிப்பு உள்ளவர்கள் வசித்ததற்காக முடக்கப்பட்ட பகுதிகளுக்கு தளர்வுகள் பொருந்தாது.
ஏப்ரல் 20-க்கு பின் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள்குறித்து மாநில அரசுகளே முடிவு செய்யலாம்; ஆனால் ஊரடங்கு விதிகளுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.