விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தாலுகா, மல்லாங்கிணறு பேரூராட்சி பகுதியில் உள்ள சின்னக்குளம் ஊருணியில் கழிவுநீர் கலந்து அசுத்தமாகி வருவதை உடனடியாக தடுத்து, ஊருணியை தூர்வார வேண்டும் என்று அந்தப்பகுதி மக்கள் அமைச்சர் தங்கம்தென்னரசுவிடம் கோரிக்கை வைத்தனர். அமைச்சர் தங்கம்தென்னரசு உத்தரவின் பேரில், கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 82 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில் சின்னக்குளம் ஊருணி தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஊருணி தூர்வாரும் பணிகளை, மதுரை மண்டல பேரூராட்சிகளின் உதவி செயற்பொறியாளர் திரு.சுரேஷ்குமார், மல்லாங்கிணறு பேரூராட்சித் தலைவர் திரு.துளசிதாஸ், துணைத்தலைவர் மிக்கேலம்மாள், செயல் அலுவலர் திரு. அன்பழகன், இளநிலை பொறியாளர் திரு.கணேசன், ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மதுரையிலிருந்து நமது நிருபர்
திரு.ரவி