விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் செந்தில்குமார் (48). இவரது மகன் முத்துக்குமார் (22),. இவர் அதே பகுதியில் உள்ள மருத்துவதுணி தயாரிக்கும் தறிக்கூடத்தில் கூலி வேலை பார்த்து வந்தார். குடிப் பழக்கத்திற்கு அடிமையான முத்துக்குமார், வேலைக்கு சரியாக செல்லாமல் ஊர் சுற்றி வந்துள்ளார். இதனால் அவரது தந்தை செந்தில்குமார், மகனை கண்டித்துள்ளார். இதனால் கோபித்துக் கொண்ட முத்துக்குமார், வீட்டில் யாரும் இல்லாத போது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த கீழராஜகுலராமன் காவல் நிலைய போலீசார் விரைந்து சென்று, முத்துக்குமார் உடலை மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.