திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சித் தலைவர் ரூக்மணி மோகன்ராஜ் தலைமை தாங்கினார். பேரூராட்சி துணைத் தலைவர் அலெக்சாண்டர் முன்னிலையில், செயல் அலுவலர் வெற்றியரசு அனைவரையும் வரவேற்று கூட்டம் நடைபெற்றது இக்கூட்டத்தில் 18 வார்டுகளில் உள்ள பிரச்சனைகள் குறித்து கவுன்சிலர்கள் எடுத்து கூறினார். முக்கியமான பிரச்சினையாக பருவமழை தொடங்க உள்ளதால் ஆங்காங்கே உள்ள மழை நீர் கால்வாய்களை உடனடியாக தூர் வரவேண்டும் மின்கம்பங்களை சீரமைக்க வேண்டும், கழிவுநீர் தேங்காமல் பாதுகாத்துக் கொள்ள வேண்டும், கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும்,என பல்வேறு முக்கியமான கோரிக்கைகளை வார்டு கவுன்சிலர்கள் கோரிக்கை மனுக்களாக கொடுத்தனர்.
அதன்பின் பேசிய பேரூராட்சி தலைவர் ரூக்மணி மோகன்ராஜ் பருவ மழை தொடங்குவதற்கு முன்பாகவே அனைத்தையும் சீர்படுத்தி தருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கவுன்சிலர்களிடம் தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் பேரூராட்சி கவுன்சிலர்கள் நக்கீரன், துரைவேல்பாண்டியன்,அபுபக்கர் சித்திக், ரஜினி,சுகன்யா, ஜெயலட்சுமி தன்ராஜ், ஜோதிலட்சுமி மோகன், மோனிகா ராஜேஷ், ஜெயலட்சுமி ஜெய்சங்கர், ராஜன், குமாரி புகழேந்தி, கவிதா சங்கர், பாஸ்கர், பரிமளம் அருண்குமார், மற்றும் பேரூராட்சி அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு