கோவை : தற்காப்பு கலைகளில் பல வகை உண்டு, அதில் ஒன்று தான் குன்ப்பு தற்காப்பு கலை, அதில் ஒரு பகுதியாக மாநில அளவிலான Jeet Kune – du material arts நடத்திய போட்டி கோவை திருசாந்தலிங்க அடிகளார் கலை கல்லூரியில் நடைபெற்றது, இதில் மதுரை, திருச்சி, சென்னை போன்ற மற்ற மாவட்டங்களில் இருந்து போட்டியாளர்கள் கலந்து கொண்டனர், இப்போட்டியை பேரூர் ஆதீனம் குத்துவிளக்கு ஏற்றி போட்டியை துவக்கிவைத்து சிறப்புரையாற்றினார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது இது போன்ற பழமை வாய்ந்த தற்காப்பு கலைகளை இளைஞர்கள் கற்றுக்கொள்ள முன்வர வேண்டும் இதில் பலவகையான நன்மைகள் அடங்கியுள்ளது உடல் மற்றும் மனதை பாதுகாப்பாக இருக்க உறுதுணையாக இது போன்ற பயிற்சியை கற்று கொள்வது மட்டுமல்லாமல் இவ்வகை பயிற்சியை மற்றவர்களும் கொண்டு சேர்க்க வேண்டும், இப்பயிற்சியை தற்போது கற்று தரும் Chi-Kunfu Federation தலைவர் பாலமுரளி கிருஷ்ணன் மற்றும் விஜய் குமார் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் தெரிவித்தார்.