திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் கடந்த 11 வருடங்களுக்கு முன்னால் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது. ஆனால் இன்று வரை அந்த பணி நிறைவு பெறவில்லை. ரயில்வேக்கு சொந்தமான இடத்தில் மட்டும் பாலம் கட்டப்பட்டு முடிவடைந்த நிலையில் மீதி பாலம் கட்டப்படாமல் இருப்பதால் சுமார் 25 ஊர்களுக்கு செல்ல வேண்டிய வாகனத்தை போக்குவரத்து இந்த ஒரு ரயில் தண்டவாளத்தை கடக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் பல முறை அவசர ஊர்திகள் கூட இந்த பாதையை கடக்க மணிக்கணக்காக நிற்க வேண்டிய நிலை உள்ளது. ஆனால் இது சம்பந்தமாக பலமுறை புகார்கள் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லாததால் பாலம் அமைக்கும் பணி 11 வருடங்களாக முடங்கிக் கிடக்கின்றன.
இது மட்டும் இல்லாமல் நந்தியம்பாக்கம் பொன்னேரி ஆகிய ரயில்வே மேம்பாலங்களுக்கும் இதே நிலையில் தான் இன்றளவும் உள்ளன. இதுகுறித்து ஆய்வு செய்வதற்காக இன்று திருவள்ளூர் நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் திரு.ஜெயக்குமார், அவர்களும் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் திரு.துரை சந்திரசேகர், அவர்களும் பார்வை இடுவதற்காக வந்தனர். பின்பு திரு ஜெயக்குமார் அவர்கள் நம்மிடம் கூறிய பொழுது ஆறு மாத காலத்துக்குள் இந்த பாலம் கட்டி முடிக்கவில்லை என்றால் இடித்து தள்ளப்படும் என்று கூறினார். இதற்கு முன் நான்கு முறை இதே பாலத்தை இவர் வந்து பார்வையிட்டார் என்பது அனைவரும் அறிந்ததே. எனவே கூடிய விரைவில் பாலப்பணி நிறைவடைந்தால், அனைவருக்கும் மகிழ்ச்சியாக இது இருக்கும் என்று இங்கு உள்ள பொதுமக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்
திரு. பாபு